1986

1986 வீரத்தாய் பட்டம்

மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் இந்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது மிகப்பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கிறது . இந்துக்களின் மக்கள் தொகை மட்டும் குறைந்து வருவதும், இந்துக்கள் மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதும் மிக விரைவில் இந்துக்களை சிறுபான்மை ஆக்கிவிடும் அபாயம் என்பதை புள்ளி விபரங்களுடன் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக இந்து முன்னணி பிரச்சாரம் செய்தது.

அதைவிட ஒருபடி மேலே சென்று பத்து குழந்தைகள் பெற்ற இந்து தாயாரை பாராட்டி வீரத்தாய் பட்டம் கொடுத்து தங்க நாணயம் அளித்து கௌரவிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

வீரத்தாய் பட்டமளிப்பு சான்றளிப்பதில் காஞ்சி சுவாமிகள் ஆசி வழங்கினார்கள் . தமிழகத்தில் இதன் தாக்கம் பல ஆண்டுகள் இருந்தது .

அதற்கு அத்தாட்சியாக புள்ள குட்டிக்காரன் என்ற சினிமா படத்தின் பாடல் பத்து பிள்ளை பெற்றெடுத்தேன் மாமா தங்கப்பதக்கம் தருவேன் என வரிகள் இடம் பெற்றன என்பதை கொண்டு புரிந்து கொள்ளலாம்.

இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வாலேயே கேரளாவைப் போலவோ, மலேசியா, சிங்கப்பூர் போலவோ தமிழக இந்துக்கள் சிறுபான்மையாகாமல் தடுக்கப்பட்டது. விழிப்புணர்வில் இது ஒரு புதிய யுக்தியாக இன்றும் எல்லோர் நெஞ்சிலும் பதிந்துள்ளது...