1987

இந்து குரல்

1994 காயல்பட்டினத்தில் முஸ்லிம் பகுதியில் மேற்கு பார்த்த சிவாலயம் உள்ளது. அந்த சிவாலயம் அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது. சிவாலயம் சுற்றி உள்ள இடங்களை முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். மற்றும் கோவிலுக்கு செல்லும் பாதைகளில் சுண்ணாம்பு காளவாய் அமைத்து பாதையை ஆக்கிரமிப்பு செய்தது. இந்து முன்னணி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவிதமான முன் ஏற்பாடும் அதிகாரிகள் செய்யவில்லை. அதன்பின் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்கள் நேரடியாக காயல்பட்டணம் சென்று சுவாமி தரிசனம் செய்ய அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகளும், சுண்ணாம்பு காலவாயும் அகற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இடமும் மீட்கப்பட்டது.

01.06.1987 உடன்குடி பகுதி இந்துக்கள் பெரும்பான்மையான பகுதி ஆனால் இந்துக்களின் உதவியுடன் கிறிஸ்தவர்கள், T.D.T.A. மேல்நிலைப்பள்ளி என்றபெயரில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே பள்ளிகள் நடத்தி வருகின்றனர். அந்த சமயத்தில் 1986 ஆண்டு மேல்நிலைப்பள்ளியில் சத்தியமூர்த்தி S/o, சிவகுரு எதிரமாணவன் 6ம்வகுப்பு படித்து வந்தான். கிறிஸ்தவர்களின் மாம்பழ சந்தை விழாவிற்கு ஒவ்வொரு மாணவனும் 50பைசா தரவேண்டும் என்று மாணவர்களிடம் கேட்கவே, சத்தியமூர்த்தி தனது தந்தையிடம் பணம் வாங்காமல் சென்று விட பள்ளி ஆசிரியை சத்தியமுர்த்தி வீட்டிற்கு அனுப்பி விட்டனர். உடனே 50 பைசாவிற்காக பையனை அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த சிவகுரு பள்ளி சென்று கிறிஸ்தவ ஆசிரியையிடம் கேட்டார் அவர் அப்படித்தான் செய்வேன் முடிந்தால் உடனே மகனை வேறுபளியில் சேர்க்கச் சொன்னார். ஆனால் இந்து பள்ளி எதுவும் இல்லாததால் சிவகுரு உடன்குடியில் உள்ள இந்து பெரியோர்களிடம் முறையிட்டார்.

 

ஸ்வயம் சேவர்கள், பெரியோர்கள் T.D.T.A. தலைமை ஆசிரியரைச் சந்தித்து கேட்க அவரும் நாங்கள் அப்படித்தான் செய்வோம் முடிந்தால் உங்களால் பள்ளி ஆரம்பிக்க முடிந்தால் செய்யுங்கள் என்றார். இதனால் பெரியவர்கள் முகத்தில் கரிபூசினால் போல் திரும்பி வர அந்த வருடம் ஷாகா நடக்க கொடிய பெருமாள் கோவில் சங்கராந்தி விழாவில் விழா, முடிந்தவுடன் இது பற்றி யோசித்தோம் நம்மால் பள்ளி ஆரம்பிக்க முடியும் என்ற எண்ணம் மக்களிடம் உருவாக, அதன்பிறகு சந்தையடியூர் அம்மன் கோவில் பெரியோர் சந்திப்பு ஏற்பாடு செய்தோம், அங்கும் இது பற்றி பள்ளி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஸ்ரீ சூரிய நாரயனராவ்ஜி ரக்க்ஷாபந்தன விழாவிற்கு வந்தார்கள் அவர்களை வைத்து பெரியோர் சந்திப்பு நடத்தினோம் அதிலும் பள்ளி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த விழாவில் சூரிஜி அவர்கள் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள உங்களால் ஏன் பள்ளி ஆரம்பிக்க முடியாது? முடியும் செய்யுங்கள் என்று பேசினார். அதன்பிறகு, டாக்டர்.தனுபிள்ளை, பகவதி பாண்டியன், ஆத்திமுத்துனாடார், தனராஜ் நார்டார், நடராஜ நாடார், இரத்தினகுருசாமி, ராமநாத ஆதித்தன், செல்வராஜ் கொண்ட கமிட்டி போடப்பட்டது. நாம் பள்ளி ஆரம்பித்தால் நிர்வாகம் செய்வது யார் என்றகேள்வி எழுப்பட்டது. , பொது நன்மையை கருதி பள்ளி நிர்வாகத்தை இராமகிருஷ்ணா தபோவனத்தில் ஒப்படைத்தல் நல்லது என்று பள்ளி அபிவிருத்தி கமிட்டி முடிவு செய்தது. பின் உடன்குடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும், மக்களையும் சந்தித்து பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப கோரி வேண்டி அனைத்து மக்களும் முழு சம்மதத்துடன் பிள்ளைகளை அனுப்ப சம்மதித்தனர்.

உடனே பெருமாள் கோவில் பூஜை செய்து பொதுமக்களிடம் நன்கொடைக்கு சென்றோம். அனைவரும் பள்ளி கட்ட சந்தோசமாக நிதி வழங்கினார்.

பள்ளி ஆரம்பிக்க விழாக்கோலம் பூண்டு பள்ளி துவக்க விழா நடைபெற்றது. 15.06.1987 பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் வருகை தந்தார்கள் அவர் எனது அனுபவத்தில் கலந்துகொண்ட மிகப்பெரிய விழா என்று பேசினார்கள். பள்ளி 1100 மாணவ, மாணவிகளுடன் 1ம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை ஆரம்பிக்கப்பட்டது. அன்று தட்டி ஸ்வயம் சேவகர் பெரியோர்கள் எல்லோரும் சேர்ந்து மதிய உணவு வழங்கினார்கள். அதன்படி பள்ளிக்கு நன்கொடைகள் பிரித்து பள்ளிக்கு பல கட்டிடங்கள் கட்டி இன்று வரை பள்ளி நல்ல முறைப்படி ஆண் , பெண் இருபாலருக்கும் நல்ல முறையில் உள்ளது. பள்ளி ஆரம்பித்து பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக்காததால் இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பில் பள்ளிக்கு அனுமதி வழங்கக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

இந்துமுன்னணி மாநிலத்தலைவர் அரசுராஜா, ராஜகண்ணன், செல்லத்துரை , வள்ளிகுட்டி, பால் நாடார் ஆகியோர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். டாக்டர்.த.அரசுராஜா, செல்லத்துரை ஆகிய இருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்த்தபிறகும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். உண்ணாவிரதத்தை ஆதரித்து உடன்குடி பஜாரில் பொது கடை அடைப்பு நடைபெற்றது. அதன்பிறகு RDO வந்து பள்ளிக்கு அங்கீகாரம் தரப்படும் என்று எழுதி தந்தார்கள் அதன்பிறகு உண்ணாவிரதம் முடிக்கப்பட்டது.

1987 ஒலிப்பேழை வாயிலாக மக்கள் மனதில் இந்துமுன்னணி

ஆர்.எஸ்.எஸ் . அமைப்பில் பாடப்பெறும் தேச பக்தி பாடல்கள் எழுதி , இசை அமைத்தவர்களில் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் ஒருவர். இந்து முன்னணி மேடைகளிலும் ஆர்.எஸ்.எஸ் . தேசபக்தி பாடல்களே இசைக்கப்பட்டு வந்தன . ஆர்.எஸ்.எஸ் . பாடல்கள் பண்பை , தியாகத்தை , தேச பக்தியை உள்ளத்தில் பதிய வைக்கும் பாடல்கள் . ஆகவே , அவற்றையே இந்து முன்னணி மேடைகளிலும் முதலில் பாடப்பட்டது .

நமது பிரச்சார உத்தியில் புதிய மைல்கல்லாக ஒலி நாடாக்களை தயாரிக்கும் பணியானது துவங்கியது.1987 ஆம் ஆண்டு முதல் ஒலிப்பேழை ( கேஸட் ) வெளிவந்தது . அந்த ஒலிப்பேழையானது வீரத்துறவி இராம கோபாலன் அவர்களின் சொற்பொழிவாக , பாரத தேசம் துண்டாடப்பட்ட வரலாற்றை எடுத்துக் கூறுவதாக அது அமைந்தது .

அதன் பிறகு பொதுக்கூட்டங்களில் சொற்பொழிவுக்கு முன்பு ஒலிப்பரப்ப பாடல்கள் தேவைப்பட்டது . அப்படிப் போடப்படும் பாடல்கள் இந்து முன்னணியின் கொள்கை விளக்கமாக , மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துபவையாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது .

அந்த வகையில் முதல் பாடல் ஒலிப்பேழையாக வெளிவந்தது , அன்னையடா நம்ம பூமி என்ற அந்தப் பாடல் தொகுப்பை எழுதியவர் கவிஞர் சுபாஷ் . இந்து முன்னணி பாடல்கள் எளிமையான வரிகளில் , மக்கள் அன்றாடம் பேசும் பேச்சு வழக்கில் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இருந்தது .

இந்து முன்னணி தொண்டர்கள் சாதாரண மனிதர்கள் , எனவே அவர்கள் வாயில் நமது பாடல்கள் முணுமுணுக்க வேண்டும் . அப்படி உதயமான அந்த ஒலிப்பேழையில் இசை மக்களுக்கு நெருக்கமாக , ரசித்த மெட்டுகளாக இருந்தால் இன்னமும் வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும் சிந்தித்தனர் .

அன்னையடா நம்ம பூமி , வெறும் மண்ணும் கல்லும் இல்ல சாமி என்ற பாடல் பாமரனையும் சென்றடைந்தது .. அதுபோல பழைய சினிமா பாடலான மணப்பாறை மாடு கட்டி என்ற பாடலின் மெட்டில் மதச்சார்பின்மை இல்லை என்று மாய்மாலம் செய்கிறான் .... மடையனாக நினைத்து விட்டான் சின்னத்தம்பி .. என்ற பாடல் நறுக்குத் தெரித்தாற்போல் வெளிவந்தது .

ஒரு காலகட்டத்திற்கு பிறகு அது ஒலித்தகடாக ( சிடி ) கொண்டு வரப்பட்டது .


  • அதன் பிறகு ராம நாம ஜெபம்
  • ஸ்ரீ கிருஷ்ண ஜெப யோகம்
  • பாரதமாதா வழிபாடு
  • இந்துக்களின் குமுறல்
  • போராட வாடா
  • இந்துக்களின் போர்ப்பறை
  • இந்துக்களின் சிம்மநாதம்
  • ஆகிய பாடல் ஒலித்தகடுகள்
  • பல்லாயிரக் கணக்கில் மக்களைப் போய் சேர்ந்துள்ளன

வீரத்துறவி சொற்பொழிவுகள், RBVS மணியன் அவர்களின் சொற்பொழிவுகள் உட்பட பல ஒலித்தகடுகள் இந்துமுன்னணி வெளியிடுள்ளது.

விநாயகர் சதுர்த்தியின் போது பயன்படுத்த வெற்றி விநாயகர் என்ற விநாயகர் துதி , பக்தி பாடல்கள் மற்றும் ஒளவையார் அருளிய “ விநாயகர் அகவல் “ இணைத்து வெளியிடப்பட்டது

திரிசூலம் நிரவி

திரிசூலம் ரயில்வே ஸ்டேஷன் மீனம்பாக்கம் ஏர்போர்ட் என்ற பெயர் மாற்றப்பட்டதை எதிர்த்து போராடி மீண்டும் இந்து கோயில் தலம் இது என்பதை அறிவிற்கும் திரிசூலம் என்ற பெயர் நிலைக்கப் பாடுபட்டது.

மேலும் படிக்க