1991

1991 பயிற்சி முகாம்

இந்து முன்னணியின் கருத்துகளையும், பணிகளையும் கவனிக்க, வெற்றிகரமாக போராட்டங்களை நடத்த, மேடைகளில் தெளிவாக பேச, செயல் வீரர்களை உருவாக்க பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும் என்று 1991 இல் முடிவெடுக்கப்பட்டது. முதல் பயிற்சி முகாம் 1992 கரூர் தான்தோன்றி மலையில் மூன்று நாட்கள் நடந்தது. அந்த முகாமில் 55 பேர் கலந்து கொண்டனர். அந்த முகாமை தமிழகத்தின் மூத்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் திரு.சிவராம் ஜி துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 93 மற்றும் 94 ஆகிய ஆண்டுகளில் ஐந்து நாட்கள் பயிற்சி முகாம் என மாற்றப்பட்டு வந்தவாசி அருகில் உள்ள தென்னாங்கூரில் ஹரிதாஸ் கிரி சுவாமிகள் ஆசிரமத்தில் நடைபெற்றது. 1995 முதல் ஏழு நாள் பயிற்சி முகாம்கள் நடைபெறத் துவங்கியது. 2003 முதல் வட தமிழகத்தில் ஒரு முகாமும், தென் தமிழகத்தில் ஒரு முகாமும் என இரண்டு பகுதிகளில் நடைபெற ஆரம்பித்தது.

அதன் பிறகு சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு ஒன்றிய அளவில் மூன்று மணி நேர முகாம், மாவட்ட அளவில் ஒரு நாள் பயிற்சி முகாம்கள் துவங்கின. 2007 இலிருந்து மாநில அளவில் இரண்டு நாள் பொறுப்பாளர்களுக்கான விசேஷ பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தற்பொழுது வேலை வளர்ந்து வந்துள்ள சூழ்நிலையில் பொறுப்பாளர்களுக்கான அந்த சிறப்பு இரண்டு நாள் முகாம்கள் கோட்ட அளவில் நடத்தப்படுகின்றன.

பயிற்சி முகாம்களில் காலை மாலை உடற்பயிற்சிகள், கராத்தே, சிலம்பம் ,யோகாசனம், விளையாட்டு மற்றும் பரேட் பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. சொற்பொழிவுகள், கதைகள், கலந்துரையாடல்கள், கூடுதல், பேச்சுப்பயிற்சி, சகஜ சந்திப்பு, கோஷங்கள் போட , கமிட்டி அமைக்க , வழிபாடு நடத்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. .

 

நமது வரலாறு, இந்து முன்னணி லட்சியம், சுதந்திர போராட்ட வரலாறு, நமது நாட்டின் பெருமைகள், பாரத ஒருமைப்பாடு , தெய்வீக தமிழகத்தின் சிறப்பு, இந்து மதத்தின் பெருமைகள், இந்துக்களுக்கு உள்ள ஆபத்து இந்துக்கள் தர்மத்தை காக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை கற்பிக்கப்படுகிறது.

இதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான செயல்வீரர்கள் உருவாகி வீடுதோறும் இந்து முன்னணி வீதிதோறும் கிளை கமிட்டி என்ற உன்னத இலக்கை அடைய பயணம் செய்கிறார்கள்

மேலும் படிக்க