1997

1997

29.11.97 -போக்குவரத்து காவலர் செல்வராஜ் படுகொலை, கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடம் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்ட உடன் 30.11.97 காலை முதல் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.

இதைக்கண்ட காவல்துறையினரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெண்கள்,குழந்தைகள்,காவலர்கள் என அனைவரும் காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்டு சாலை மறியல் செய்தனர். தொடர்ந்து வெகுண்டு எழுந்த மக்கள் தேச விரோத சமூக விரோதிகளுக்கு நேரடி நடவடிக்கைகளின் மூலம் தாக்குதல்களை தொடர்ந்தனர்.இவற்றுக்கு இந்து முன்னணிகாரர்கள் தான் காரணம் எனக்கூறி காவல்துறையினர் கொலை, கொலைமுயற்சி, தீவைப்பு கடைகளை சூறையாடியது என எத்தனை பிரிவுகள் உள்ளதோ, அத்தனையும் போடப்பட்டு தொண்டர்கள் சுமார் 500 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்கள் மற்றும் கட்சி வேறுபாடின்றி அனைவரும் கொடுத்த ஆதரவாலும் நமது இயக்க வழக்கறிஞர்கள் பரிவார் அமைப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் அனைவரும் விடுதலை பெற்று வெளியே வந்தனர்.

1997 – விருகம்பாக்கம்

விருகம்பாக்கத்தில் உள்ள அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் சுமார் 800 ஆண்டு பழமையானது. இக்கோயிலினை 1984 ஆம் ஆண்டு பாலாலயம் செய்து அதன் பிறகு இந்து அறநிலைய ஆட்சித் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கோயிலின் சொத்துக்களை பலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.

அவர்களிடம் இருந்து இடங்களை மீட்டு கோயிலினை புனர் நிர்மானம் செய்ய உதவியது இந்து முன்னணி. மேலும் இக்கோயிலுக்குச் சொந்தமான மெட்டுக்குளம் என்ற குளம் சுமார் ஒரு ஏக்கருக்கு மேல் உள்ளது. அதனை சில இஸ்லாமிய சமூக விரோதிகள் ஆக்கிரமிப்புச் செய்ததுடன் போலி பட்டாவும் வாங்கியிருந்தனர்.

உடனே ஆலய நிர்வாகிகள் நம்மிடம் இவ்விஷயத்தை கொண்டுவர நமது இயக்கத்தினர் அக்கோயிலுக்கு நிலங்கள் இருந்தன என்பன போன்ற ஆவணங்களை சேகரித்து காவல்துறையிடம் புகார் செய்தோம். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களிடம் உள்ள பட்டாவை வைத்து அந்த இடத்திற்கு இரும்பு தகரங்களை கொண்டு வேலி அமைத்தனர்.

நாம் அறநிலையத் துறை மந்திரியிடம் விஷயத்தை கொண்டு சென்றோம்.உடனே போலி பட்டா ரத்து செய்யப்பட்டு ஆலய சொத்தை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

 

1997 எழுந்தது அலுவலகம்- அல்ல -ஆலயம்

மக்களிடையே தேசிய எழுச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் ஒன்று ஹிந்து முன்னணி . ஹிந்து முன்னணி அமைப்புக்கு அலுவலகம் என்று ஒன்று இல்லாமல் பொறுப்பாளர்கள் வீடுகளே அலுவலகமாகத் துவக்கப்பட்டது . பின்னர் சிறு குடிசையில் மாநில அலுவலகம் செயல்பட்டு வந்தது . பின்னர் சேத்துப்பட்டில் வீட்டில் செயல்படும்போது மாநிலத் தலைமைக்குச் சொந்தமாக ஒரு அலுவலகம் இருப்பதன் அவசியம் ஏற்பட்டது .

சென்னையில் 1995 இல் முதல் கார்யாலயம் சிந்தாதிரிப்பேட்டையில் கட்டி மார்ச் 30 இல் கணபதி பூஜை செய்யப்பட்டது . ஆனால் இந்த அமைப்பின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காத சில தீய சக்திகள் பூஜை நடந்த 14 நாட்களிலேயே வெடிகுண்டு வைத்து தகர்த்து விட்டன . இந்தக் குண்டு வெடிப்பில் முன்னணி ஊழியர் பைபிள் சண்முகம் உயிரிழந்தார் . அதன் பிறகு தற்காலிகமாக மாநில அலுவலகம் பெரம்பூர் பகுதிக்கு மாற்றப்பட்டது.

குண்டு வெடிப்பு இடிபாடுகளை அகற்றிவிட்டு , புதிய கட்டிடம் கட்ட கோபால்ஜி தீவிர முயற்சி எடுத்தார் . மீண்டும் அந்தக் கட்டடம் கட்ட ஆரம்பிக்கும் முன்பு ஆதிபுரீஸ்வரர் கோயிலில் முறையாக பூஜை நடத்தப்பட்டது .

அலுவலகம் அருகில் உள்ளவர்களுக்கு மனதில் பெரிய அச்சம் இருந்தது . அதனைப் போக்கிட இயக்கத்தின் மீது நம்பிக்கையும் , பிடிப்பும் ஏற்பட சில ஏற்பாடுகள் செய்யப்பட்டன . பிறகும் கூட சிலருடைய எதிர்ப்புகள் ; இவற்றின் இடையே பணி துவக்கப்பட்டது . இந்நிலையிலும் கூட பலருடைய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை .

நல்ல உள்ளம் கொண்ட இந்து முன்னணி தொண்டர்கள் மூலம் மீண்டும் அதே இடத்தில் 1997 இல் கட்டடம் எழும்பியது . புதிய கட்டடத்திற்கு வரைபடம் போடுவதிலிருந்து கட்டடத்திற்குத் தேவையான எல்லா ஆரம்ப வேலைகளையும் செய்து கொடுத்தவர் பிரதீபன் அவர்கள் . பல தரப்பில் இருந்து எதிர்ப்பு இருந்த போதிலும் இவரது பணி தொடர்ந்தது . கட்டடத் தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முடியாதபடி தொந்தரவுகள் , இடைஞ்சல்கள் , மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன . அதனால் வேலையில் தொய்வு , தாமதம் தொடர்ந்து ஏற்பட்டது .

தொண்டர்கள் மூலம் பொதுமக்களிடம் வசூலித்த சிறு சிறு தொகையைக் கொண்டு தான் இந்தக் கட்டடம் எழும்பியது . குகன் , முனுசாமி , சத்தியராஜ் , சிவலிங்கம் குறிப்பிட்டுச் சொல்லும்படி உரிய தொண்டர்கள் , மற்றும் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஒத்துழைப்புடன் இந்தக் கட்டடம் 1998 மே மாதத்தில் முடிவடைந்தது . இந்து முன்னணியின் செயல்பாடு என்றும் மக்களின் செல்வாக்கில் என்பதற்கு இந்த அலுவலக புனர்நிர்மாணம் என சிறந்த உதாரணமாகும் .

மேலும் படிக்க