2001 காவேரிப்பட்டினம்
கடந்த 2001ம் வருடம் வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது காவேரிப்பட்டினம் நகரத்திற்கு வருகை புரிந்தார். அச்சமயம் அப்பகுதி மக்களிடையே காவேரிப்பட்டினம் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உரையாற்றினார் அப்பொழுது காவேரிபட்டினம் அடுத்த வீரபத்ர துர்க்கம் என்ற பிரதான கோட்டைகள் மற்றும் கோயில்கள் கொண்ட பகுதியைச் சேர்ந்த அன்பர் தங்கள் பகுதியில் திப்புசுல்தான் படையெடுப்பின் போது தரைமட்டமாக்கப்பட்ட பெருமாள் மற்றும் சிவன் கோயில்கள் இருப்பதாகவும்
மூலவர்களைகாத்து வருவதாகவும் மீண்டும் கோயில்கள் எழுப்பி பூஜைகள் நடைபெற உதவி புரியுமாறு வேண்டினார் கூட்டத்தினரை நோக்கி யாராவது ஒருவர் இப்பணியை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டபோது காவேரி பட்டினத்தைச் சேர்ந்த கேசவன் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் விருப்ப ஓய்வு பெற்றவர் தான் இப்பணியை ஏற்றுக் கொள்வதாக ஐயா அவர்களிடம் வாக்குறுதி அளித்தார் ராமகோபாலன் அவர்களின் வாக்கை வேத வாக்காக ஏற்ற கேசவன் உடனடியாக கிராமத்திற்குச் சென்று தலைகள் வெட்டப்பட்டு கைகள் உடைக்கப்பட்டு சிதிலமடைந்த கோயிலையும் சிலைகளையும் கண்டு வேதனையுற்று உடனடியாக பணியை தொடங்கினார் ஊர் பொதுமக்கள்
உதவியுடன் கோயில் பகுதியை தூய்மைப்படுத்தி மூலவர் இருந்த இடத்தில் தினசரி விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்தார் பிறகு படிப்படியாக கோயில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு இன்றைய தேதி வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறார் தற்போது பிரம்மாண்டமாய் கோயில் எழுப்பப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது 10 12 2016 அன்று துர்க்கம் சென்று பெருமாள் ஆலயத்தில் சந்தித்தோம் 2001 ஆம் ஆண்டு கோபால்ஜி அவர்களை சந்தித்தது பற்றி கூறியபோது மிக்க மகிழ்ச்சி அடைந்து எங்களை வரவேற்று கோயிலை சுற்றிக் காட்டினர் கோபால்ஜி
தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார் என்று பெருமிதத்தோடு கூறினார் மேலும் புதிதாக அதே பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலையும் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டு இருப்பதாக கூறி அங்கேயும் அழைத்துச் சென்று காட்டினார் கருநீல கல்லினால் செய்யப்பட்ட பிரம்மாண்ட லிங்கத்தைக் கண்டு உடல் சிலிர்த்தது கயவர்களால் சிதைக்கப்பட்ட லிங்கம் மற்றும் பார்வதிதேவியின் அற்புத சிலைகள் கண்டு மனம் வேதனை அடைந்தது மலையின் உச்சியில் ரம்மியமான சூழலில் கேசவன் அவர்களின் முழு முயற்சி மற்றும் அற்பணிப்புபிரம்மாண்டமாய் கோவில் எழும்பி வருகிறது அண்ணா ரையும் அவருக்கு உந்துதலாக இருந்த வீரத்துறவி ஸ்ரீ ராம கோபாலன் ஐயா அவர்களையும் அப்பகுதி மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள் என்று மகிழ்ச்சியுடன் திரும்பினோம்
2001 - திருச்சி கல்லூரி திறப்பு விழா
இதற்காக பாரத கல்ச்சுரல் டிரஸ்ட் ஏற்படுத்தி முறைப்படித்தினர் இதன் மேனேஜிங் டிரஸ்டி ஆக ஆர்.எஸ்.எஸ்.திருச்சி எஸ் ராஜேந்திரன் அவர்களை நியமித்து கட்டிடம் கட்டும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் ஆர்எஸ்எஸ் சங்க பரிவாரில் முதல்முறையாக ஒரு அற்புதமான கட்டிடம் காவிரி கரையோரத்தில் நெல் வயல்கக்கும் வாழைதோப்புகளுக்கும் தென்னந் தோப்பு களுக்கும் இடையில் அற்புதமாக எழுந்தது 2001 பிப்ரவரி 25 ஆம் தேதி பாரத பண்பாட்டு பயிற்சி கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது இந்த திறப்பு விழாவில் காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆர்எஸ்எஸ் அகில பாரத பொறுப்பாளர் மானனிய கி சூரிய நாராயண ராவ் அவர்கள் கலந்துகொண்டனர் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆர்எஸ்எஸ் ஹிந்து இயக்க சகோதரர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
2001 மதமாற்ற முறியடிப்பு மாநில மாநாடு – மதுரை...
தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கிறிஸ்தவ மிஷினரிகள் மதமாற்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதற்காக ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தமிழகத்தில் வேலை செய்கின்றனர். கோடிக்கணக்கில் பணம் வெளிநாடுகளிலிருந்து வருகிறது .
அந்த பணத்தை பயன்படுத்தி ஏழை எளிய மக்களின் மனதில் ஆசை காட்டி, அச்சுறுத்தி, இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றி விடுகின்றனர் . இந்த அநியாய கலாச்சார படையெடுப்பை தடுத்து நிறுத்த வகையில் தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையோடு மாபெரும் மாநாடு மதுரையில் நடத்தப்பட்டது . ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கருணாநிதி நமக்கு இடைஞ்சல் கொடுப்பது வாடிக்கை.
2001 மதுரை மாநில மாநாடு தமுக்கம் மைதானத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
மாநாட்டிற்கு முதல் நாள் ஜூன் 29 இரவு அனைவரும் மாநாட்டிற்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கும் போது கருணாநிதி ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் .
ஆங்காங்கே திமுகவினர் மறியலில் ஈடுபட மாநாட்டுக்கு வருபவர்கள் பெரும் இடையூறுகளை சந்தித்தனர். துப்பாக்கி குண்டுக்கே அஞ்சாத இந்து முன்னணி சிங்கங்கள் இதற்கா அஞ்சுவார்கள். மறுநாள் திட்டமிட்ட ரீதியில் மாநாடு பேரணியுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் எஸ்வி சேகர் அவர்களும், நாட்டியப் பேரொளி பத்மா சுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டுப் பேரணியில் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் எண்ணிக்கையில் அதிகம் கலந்து கொள்ளும் மாவட்டத்திற்கு வீரத்துறவி ராமகோபாலன் கையினால் மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடும்போட்டி குமரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கிடையே கடும் போட்டி இருந்தது.
கோவை மாவட்டம் பரிசை வென்று மோதிரத்தை பாரத பண்பாட்டு பயிற்சிக் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்தனர். இந்த மாநாடு தமிழகத்தில் மதமாற்ற சக்திகளுக்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.