2005

2005 யார் தமிழன்- மாநில மாநாடு- திண்டுக்கல்

இந்து முன்னணி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி திண்டுக்கல்லில் வெள்ளிவிழா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்துக்கள் சிறுபான்மையினராக ஆகிவிட்டால் தமிழ், தமிழனின் கதி என்ன என்ற ஒரு அதி முக்கியமான கேள்வியை முன்வைத்து மாநாடு டிசம்பர் 4 2005 ஆம் ஆண்டு அன்று நடத்துவதற்கு தேதி குறிக்கப்பட்டது . மாநாட்டிற்கு 10 நாட்கள் முன்னால் வானம் பொத்துக் கொண்டது போல இடைவிடாது மழை பெய்ய தொடங்கியது.

மழையின் காரணமாக மாநாட்டு பணிகள் தடைப்பட்டன . மாநாடு நடைபெறும் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது . வேறுவழியின்றி இரண்டு வாரங்களுக்கு மாநாடு ஒத்திவைக்கப்பட்டு, டிசம்பர் 18-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது . ஒரு வாரத்திற்கு முன்பாக மைதானம் சுத்தம் செய்ய ஆரம்பிக்க வேண்டும் . தண்ணீர் வற்றி விட்டது என்று சுத்தம் செய்ய புல்டோசர் ஏற்பாடு செய்யப்பட்டது . ஒரு சில இடங்களில் ஒரு அடி ஆழம் தண்ணீர் தேங்கியிருந்தது . சுத்தம் செய்யச் சென்ற புல்டோசர்கள் சகதியில் மாட்ட பெரும் சோதனைகளை சந்திக்க நேர்ந்தது.

 

சோதனைகளை சாதனையாக மாற்றுபவர்கள் தானே இந்து முன்னணியினர் . பல்வேறு வாகனங்களில் கொண்டு மண்ணைக் கொண்டு வந்து கொட்டி திடல் ஏற்பாடு செய்யப்பட்டது . இறைவன் அருளாலும், இடைவிடாத முயற்சியாலும் மாநாடு இனிதே நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மழையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்களை தங்க வைக்க மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது .

மாநாட்டுப் பேரணி துவங்கும் இடத்தில் அனைவரும் பசியாற கம்பங் கூழ் வழங்கப்பட்டது. மாநாட்டு ஊர்வலத்தில் விதவிதமான வகையில் அக்னிச்சட்டி ஊர்வலம் , ரத யாத்திரைகள், குழந்தைகளின் கோலாட்டம், புலியாட்டம், மான் கொம்பு சண்டை , கொடி அணிவகுப்பு என்று ஏராளமான நிகழ்ச்சிகள் ஊர்வலத்தில் அணிவகுத்தன . ஊர்வலத்திற்கு வந்தவர்கள் அனைவரின் கைகளிலும் பாரதமாதா படம் இருந்தது. அனைவரும் காவி வண்ண டீ சர்ட் அணிந்து வந்தது அனைவரையும் கவர்ந்தது. மாநாட்டிற்கு ஆசியுரை வழங்க துறவியர் பெருமக்கள் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், தேனி பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காரனந்தா மகராஜ், ஸ்ரீ சக்தி சைதன்யானந்த மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி அகில பாரத அமைப்பாளர் திரு. ஹரிஹர நந்தா அவர்களோடு பிஜேபியின் அன்றைய அகில இந்திய துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் வெளியீடான யார் தமிழன்? ஒலிநாடா மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது . கடும் சோதனைகளை சாதனையாக்குவது இந்து முன்னணியினருக்கு கைவந்த கலை என்பது இந்த மாநாட்டில் நிரூபணமானது . தமிழன் என்று சொல்லிக்கொள்ள வேண்டும் என்றால் இந்துக்களாக இருக்க வேண்டும் . இந்துதான் தமிழன்! தமிழன் தான் இந்து என்பதை நிரூபித்தது இந்த மாநாடு.

மேலும் படிக்க