2007

2007 - இராமர் பாலம்

2007-ல் ஜூலைமாதம் மதுரையில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் தென் தமிழகத்தில் இருந்து 40,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அதே ஆண்டு ஆடி அமாவாசை அன்று நாடெங்கும் 71,000 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இராமேஸ்வரத்தில் மாபெரும் இராம மகாயக்ஞம் நடைபெற்றது. தென் பாரதத்தில் இருந்து 40,000க்கும் அதிகமாக மக்கள் இந்த யக்ஞத்தில் பங்கேற்றனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா ,தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

அதே ஆண்டு அக்டோபர் 12- ல் நாடு முழுவதும் 5400 இடங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 12 இலட்சம் மக்கள் பங்கேற்றனர் தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் 10,000க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.பாலத்தை காக்க கோரி பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

முடிவுரை.
எது எப்படி இருந்தாலும் தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நினைவுச் சின்னத்தை காக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. இத்திட்டத்தை முறியடிக்க உறுதியாக அணிதிரளுவோம் ,போராடுவோம்.

 

2007 - கிருஷ்ணகிரி மலை


மூன்று மாநில எல்லைகள் ஒன்று கூடும் மாவட்டம் இஸ்லாமியப் படையெடுப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இப்பகுதி மாமன்னர் கிருஷ்ண தேவராயரால் கோட்டை கட்டப்பட்டதால் கிருஷ்ணதேவராய மலை கிருஷ்ணகிரியாக மாறி பெயரும் கிருஷ்ணகிரி என்று வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பதினோரு கோட்டைகள் பாராமஹால் என்று வழங்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இம்மலையின் மேல் இருந்த கிருஷ்ணர் கோவில் இஸ்லாமியர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, மூலவர் மட்டும் கீழே உள்ள நரசிம்ம சாமி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி சேர்மன் நகராட்சி கூட்டத்தில் இனி கிருஷ்ணகிரி மலை, சையது பாஷா மலை என்று அழைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி அறிக்கை வெளியிட்டார். உடனடியாக செயல்பட்ட கிருஷ்ணகிரி இந்து முன்னணி பொறுப்பாளர் அனைத்து இந்து அமைப்புகளுடன் பொது மக்களையும் சேர்த்து போராட்டம் நடத்த ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்தது.

முருகர் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு முக்கிய பிரமுகர்கள் உட்பட 520 பேர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசி உடனடியாக தீர்மானத்தை ரத்து செய்வதாக உறுதி, அளித்ததோடு மறுநாளே நகராட்சி தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

இந்து முன்னணி விரைந்து செயல்பட்டதால் பெரும் களங்கம் தவிர்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மலையைச் சுற்றி ஊர் பொதுமக்கள் பவுர்ணமி தோறும் கிரிவலம் செய்ய ஏற்பாடு செய்து காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் துவக்கி வைக்க ஒவ்வொரு மாதமும் மலையைச் சுற்றி தற்போது வரை கிரிவலம் நடைபெற்று வருகிறது.

2007 – புதுவை


சமய இலக்கியம் என்பது தீண்டத்தகாத ஒன்றுபோல் பார்க்கப்பட்டதால் தான் செம்மொழி மாநாடு அரசியலாக்கப்பட்டு சமய இலக்கியத்திற்கு இடமில்லாமல் போனது. உண்மையில் சமய இலக்கியங்கள் இல்லை என்றால் தமிழர்களின் வரலாறு முழுமையாகத் தெரிய வாய்ப்பு இல்லை.

தமிழ் இலக்கியத்தை போற்றி வளர்த்த ஆன்மீக மடங்கள் கூட மாநாட்டில் நமது இலக்கியங்கள் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க வில்லை. ஆனால் இந்த அநீதிக்கு எதிராக முதல் குரல் பதிவு செய்தது இந்து முன்னணி தான்.

எழுத்து வடிவில் மட்டுமல்ல மேடை வாயிலாக நமது இலக்கியங்களுக்கு எத்தனை எத்தனை தாக்குதல்கள்.திராவிட இயக்கத்தின் பெயரில் பட்டிமன்றம் நடத்த அனுமதி வாங்கப்பட்டது. தலைப்பு என்ன தெரியுமா கற்பில் சிறந்தவள் கண்ணகியா ?சீதையா? நாம் எதிர்ப்பு தெரிவித்தபோது கருத்துரிமை என்றார்கள்.

பதிலுக்கு இந்து முன்னணி சார்பில் போட்டி பட்டிமன்றம் நடத்த தீர்மானித்தது தலைப்பு கற்பில் சிறந்தவள் ராசாத்தியா? மணியம்மையா? என்று அனுமதி கேட்ட போது இருவருக்கும் பட்டிமன்றம் நடத்த தடை போட்டது காவல்துறை. கருத்துரிமை காணாமல் போனது. இந்து முன்னணி வெற்றி பெற்றது.

புதுச்சேரியில் புதிய பஸ்நிலையம் எதிரில் உள்ள J.V.R ஹாலில் 2007 இல் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா தலைமையில் பேராசிரியர் தெய்வநாயம் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

கருத்தரங்கத்தின் தலைப்பு "இந்தியா தோமா வழி வந்த கிறித்தவ நாடே, திருவள்ளுவர் கிருத்துவரே" யார் வேண்டுமானாலும் வாதம் செய்யலாம்" என்று போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்து முன்னணி சவாலை ஏற்று கூட்டம் நடக்கும் முன்பே அரங்க வாசலில் காத்திருந்தது, இந்து முன்னணி. சவால் விட்டவர்கள் காணாமல் போய்விட்டனர். வெற்றி கோஷத்துடன் வீடு திரும்பினார்கள்.

2007 – ராம ராஜ்ஜிய ரத யாத்திரை


2007 மார்ச் மாதம் 3-ம் தேதி முதல் மே மாதம் 13ஆம் தேதி முடிய தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இராமராஜ்யம் பிரச்சார யாத்திரை ரதம் துவங்கப்பட்டது. இந்த யாத்திரையில் மொத்தம் 5 ரதம் புறப்பட்டது.

மேற்கண்ட 5 ரதங்களையும் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி ஏற்பாடு செய்து வழங்கியது. அந்த ஐந்து ரதங்கள் பெயர்கள்.

  • இராம ரதம்
  • குகன் ரதம்
  • ஜாம்பவான் ரதம்
  • ஜடாயு ரதம்
  • அனுமன் ரதம்

என்று அவற்றிற்கு பெயரிடப்பட்டிருந்தது.

இராம ரதம்:


மானனீய ஸ்ரீ கோபால் ஜி அவர்கள் தலைமையேற்று வழி நடத்தி வந்தார். மற்ற நான்கு ரதங்களும் நான்கு திசைகளில் யாத்திரை செய்து, குறிப்பாக மாநாட்டு சிறப்பு மேடைக்கு வந்து சேரும். கோபால் ஜி தலைமையில் மாநாடும், இராமராஜ்ய யாத்திரையினுடைய நோக்கமும், நோக்கம் பற்றிய சொற்பொழிவும், நடைபெற்று அந்த பஞ்சலோக விக்ரகங்களுக்கு வழிபாடு செய்து பிரசாதங்கள் வழங்கப்படும். இரதத்தின் மூலம் வழங்கப்பட்ட கையளவு பட்டாபிஷேக படம் 6 லட்சம் பிரதிகள் விநியோகிக்கப்பட்டது. விளக்க நோட்டீஸ் 3 லட்சம் விநியோகிக்கப்பட்டது. ஐந்து ரதங்களும் பயணித்த தூரம் 60 ஆயிரம் கி.மீ. மொத்த நாட்கள் 42. பெறப்பட்ட புதிய முகவரிகள் 3000. இந்த யாத்திரையின் மூலம் இராம பக்தியை மாநிலம் பூராவும் வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. மேற்படி ஐந்து ரதங்களின் பெயருக்குரிய கதாநாயகரின் அருமை பெருமைகளைப் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேற்படி ரதயாத்திரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முன்பு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்தானுமாலயன் , இராமகோபாலன் ஜி நா.முருகானந்தம் இந்து முன்னணி மற்றும் பல அமைப்புகளில் இருந்தும் திரளானவர்கள் பங்கேற்றனர்.

இராம ரதத்தில் ஸ்ரீ கோபால்ஜி அவர்களும், அனுமன் ரதத்தில் சு. மூர்த்தி அவர்களும், ஜாம்பவான் இரதத்தில் நானும் பொறுப்பேற்று யாத்திரை செய்தோம் மேற்படி 4 ரதப்பவனி தவிர , இராம ஜோதி ரதம் , இராம்ஷீலா பூஜன் ரதம் ஆகியவற்றில் மாவட்டத்திற்குள் யாத்திரை செய்துள்ளேன் .

மேலும் படிக்க