2008

2008

2008 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஆதனூர்,கிருஷ்ணபுரம் பகுதிக்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கு சொந்தமான ஆலய இடத்தை அப்பொழுது ஆட்சியில் இருந்த திமுக, சமத்துவபுரம் கட்ட எந்தவித அறிவிப்புமின்றி அனுமதி அளித்தது.

அப்பொழுது கோட்டப் பொறுப்பாளராக இருந்த வெள்ளையப்பன், மாவட்ட பொறுப்பாளர்கள் முரளி உட்பட அனைவரும் பொது மக்களை இணைத்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களின் விளைவாக சமத்துவபுரத்திற்கு ஆணையம் ஒதுக்குவதை அரசு கைவிட்டது. அந்தப் பகுதி விளைநிலங்களும் காப்பாற்றப்பட்டன.

மேலும் பல போராட்டங்களை நடத்தி, அருள்மிகு பர்வதனார் முத்துமாரியம்மன் கோயில் நிலத்திற்கு, மாற்று மதத்தினருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வைத்தது இந்து முன்னணி.