2019

2019 - கோலம் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

தேர்தல் சமயத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ஒரு அறிவுஜீவி தேர்தல் அதிகாரி அங்குள்ள கோலம் ஒரு கட்சியின் சின்னத்தை பிரதிபலிப்பதாக கூறி அதை அழிக்கச் செய்தார். இந்து முன்னணி இதை கண்டித்து போராட்டத்தை அறிவித்ததுடன், சமூகவலைத்தளங்களில் ஆலயங்களில் அத்துமீறல் நடக்கக்கூடாது என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டதன் மூலம் மீண்டும் அதே கோலம் அதே இடத்தில் வரையப்பட்டது.

2019 - 370 சட்டப்பிரிவு
2019ம் ஆண்டு 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து அதன் சாதக அம்சங்கள் பற்றிய விளக்கக் கருத்தரங்கம் - இந்து வழக்கறிஞர் முன்னணி சார்பாக - வழக்கறிஞர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது .

 

2019 - அத்திவரதர் - சேவையே பக்தி


காஞ்சி அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு இந்து முன்னணி பேரியக்கம் சார்பாக தன்னார்வல தொண்டர்கள் - கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளிலும் , நீர் மோர் பந்தல் - அன்னதானம் போன்ற பணிகளிலும் , நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு தூய்மைப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டனர் . பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து 40 நாட்கள், சுமார் 600 பேர் சேவை பணிகளில் ஈடுபட்டனர்

2019 - அறநிலையத்துறை மடையர்களுக்கு தக்க பதில் கொடுத்த காரமடை.


கோவை காரமடை அரங்கநாதசாமி கோயில் இராஜகோபுரத்தின் அருகில் கழிப்பறை கட்டுவதற்காக அறநிலையத்துறை முயற்சித்தது. கழிப்பறை கட்டுமானத்தை போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தியது இந்து முன்னணி.

காரமடை கோவிலைச் சார்ந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட சமுதாய மக்களின் வரலாற்றை மறைக்கும் விதமாக பல்வேறு பணிகளில் அறநிலையத் துறை ஈடுபட்டது . அதைத்தடுத்து அந்தந்த சமுதாய மக்களின் குல வழக்கத்தை கோவிலுக்கு தொடர்ந்து வழங்குவதற்கு உதவியது இந்து முன்னணி . ராஜ கோபுரம் நீண்ட காலம் புனரமைக்கப்படாமல் இருந்த நிலையில் அதனை புனரமைக்க வைத்தது இந்து முன்னணி . கோவிலில் பஜனைப் பாடல்கள் பாடுவது பாரம்பரிய வழக்கம் . அதைத் தடுக்க நினைத்த நிர்வாகத்தினரை போராட்டத்தின் மூலம் பணிய வைத்தது இந்து முன்னணி .

2019 - உள்ளே நுழையாதே - பதாகை


இந்து முன்னணி பேரியக்கம் மதமாற்றத்தின் அபாயங்களை வலியுறுத்தி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றது. அந்த கிராமத்தில் கிறிஸ்தவர்கள் இல்லாத நிலையில் ஒரு சர்ச்சை கட்டி அங்கு ஒரு பாதிரியாரை நியமித்தனர் கிறிஸ்தவ மிஷனரிகள் .

மக்கள் மத்தியில் கிறிஸ்தவர்களின் மதமாற்ற யுத்தியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது இந்து முன்னணி. அதனுடைய விளைவாக தூத்துக்குடி மாவட்டம் வாத்தியார் குடியிருப்பு கிராம மக்கள் ஒரு மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கினார் . கிராமத்தின் எல்லையில் மதமாற்றும் நோக்கத்தோடு யாரும் உள்ளே வரக்கூடாது என்று பதாகை வைத்து புரட்சி ஏற்படுத்தினர்.

2019 - ஒன்றிய சங்கமம்


தமிழகத்தில் தமிழை வைத்து பிழைப்பு நடத்துகின்ற அரசியல்வாதிகளின் கபட நாடகத்தை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவும் , 'தமிழனும் ஹிந்துவும் வேறு , தமிழர் வழிபாட்டு முறைகள் , வாழ்க்கை முறைகள் வேறு ' என்று சொல்லக்கூடிய போலி தமிழினவாதிகளை விரட்ட வேண்டும் என்ற வகையிலும், " தெய்வீக தமிழைக் காக்க இந்து சங்கமம் " என்ற தலைப்பில் 731 ஒன்றியங்களிலும், பொதுமக்களுக்கான நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

இதன் மூலம் நமது வேலை சென்றடையாத பஞ்சாயத்துகளுக்கு வேலை சென்றடைய வேண்டும் என்பது திட்டம் . இதுவரை 70 ஒன்றியங்களில் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது . பிப்ரவரி 2020 க்குள் அனைத்து ஒன்றியங்களிலும் நடத்தப் பெறும்.

2019 - கோட்ட மாநாடுகள்


இந்து விரோத முறியடிப்பு மாநாடு என்ற தலைப்பில் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கோட்ட மாநாடுகள் - 10 இடங்களில் நடத்தப்பட்டன .

2019 - கோவிலைக் காக்க எழுந்த ஹிந்து சக்தி


108 திவ்ய தேசங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. கிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகள் அந்த கோவில் அமைந்துள்ள குன்றின் மேல், சிலுவைகளை நட்டு பாறைகளில் பைபிள் வாசகங்களை எழுதி மலையை முழுக்க ஆக்கிரமித்தனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்துமுன்னணி மக்களை ஒன்றிணைத்து மக்களிடத்தில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது .

ஒரு நாள் அந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் மக்களால் அகற்றப்பட்டன . ஹிந்துக்களின் எழுச்சியைக் கண்ட மாவட்ட நிர்வாகம் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகளை அகற்றி சிலுவைகளை எடுத்து பைபிள் வாசகங்களை அகற்றினர் . திவ்யதேச ஆலயமும், மலையும் இந்து எழுச்சியால் மீட்கப்பட்டது.

2019 - சுதந்திர வீரர்களுக்கு அஞ்சலி!


ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது . தமிழகம் முழுவதும் 34 விடுதலைப் போராட்ட வீரர்களின் மணிமண்டபங்கள், இல்லங்களுக்கு சென்று அவர்களது திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

2019 - தர்ம வீரர்


தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் பணியாற்ற தர்மவீரர் என்ற இந்து பாதிரிகளை உருவாக்க பத்திரிகை விளம்பரம் தரப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டனர்.

  • விண்ணப்பித்தவர் - 427 பேர்
  • நேர்முகத்தேர்வு வந்தவர் - 65 பேர்
  • பயிற்சி முகாம் வந்தவர் - 15 பேர்

2019 - தாண்டியாவுக்கு தடையா?


சென்னை சவுகார்பேட்டையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான வட இந்திய இந்துக்கள் தாண்டியா நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். திடீரென காவல்துறை இரவு 10 மணிக்குமேல் இந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என உத்தரவிட்டது. விஷயமறிந்த இந்து முன்னணியினர் களத்தில் இறங்கி பாரம்பரிய பழக்க வழக்கத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று போராடியதன் விளைவாக நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது.

2019 - பசுத்தாய் வெள்ளிவிழா


2019 இந்து முன்னணி பேரியக்கத்தின் மாத இதழான பசுத்தாய் வெள்ளிவிழா ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் இந்து முன்னணி பேரியக்கம் செய்து வருகின்ற மகத்தான பணிகளை பட்டிதொட்டி தோறும் எடுத்துச் செல்கின்ற பசுத்தாய் 19,000 சந்தாதாரர்களை கொண்டதாக வெற்றிநடை போட்டு வருவது குறிப்பிடத்தக்கது . இந்த நிகழ்ச்சியில் பசுத்தாய் இதழின் ஆசிரியர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களுடைய 93 ஆவது ஆண்டு பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது.

2019 - படம் காட்டாதே


திண்டுக்கலில் மலைக்கோட்டை அபிராமி உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவில் உள்ளது. அக்கோவில் திப்பு சுல்தான் படையெடுப்பில் இடிக்கப்பட்டது. தற்போது சுல்தான் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. கோவில்களில் படப்பிடிப்பு நடத்துவது கோவிலின் புனிதத்தன்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் எனவும், மேலும் இந்துக்களை படுகொலை செய்த இஸ்லாமிய கொடுங்கோலன் திப்பு சுல்தான் பற்றிய படத்தை இந்து கோவிலில் எடுப்பதை, அவன் இடித்த கோவிலில் எடுக்க ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று இந்து முன்னணி போராட்டத்தில் இறங்கவே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது .

2019 - மின்சாரம் - உஷார்


வேலூர் பள்ளிகொண்டா மின்சார வாரிய கணக்கெடுப்பு அட்டையில் கிறிஸ்தவ மதப் பிரச்சார விளம்பரம் இருந்தது. அதைக் கண்டதும் போராட்டத்தில் இறங்கியது இந்து முன்னணி, அனைத்து அட்டைகளையும் மின்சார வாரியம் திரும்பப் பெற்று அழித்தது. மின்சார வாரிய ஆணையம் இனி மின் கணக்கெடுப்பு அட்டைகளில் எத்தகைய விளம்பரமும் இருக்கக்கூடாது என உத்தரவிட்டது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கம் அருகே அரும்பாக்கம் கிராமத்தில் PWD- க்கு சொந்தமான இடத்தில் ஜெபக்கூடம் கட்டுவது மட்டுமல்லாமல், அதில் திருட்டு மின்சாரம் உபயோகித்து வந்தனர். அந்த சட்டவிரோத செயலை தடுத்து நிறுத்தியது இந்து முன்னணி.

2019 - முள்ளை முள்ளால் எடுத்தல்


கிருஷ்ண பகவானையும் , மகாபாரதத்தையும் இழிவுபடுத்திப் பேசிய திராவிட கழக தலைவர் கி . வீரமணிக்கு திருச்சி மற்றும் திருப்பூரில் தக்க மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று சொன்ன நடிகர் கமலஹாசனுக்கு அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தக்க மரியாதை செலுத்தப்பட்டது. சபரிமலை ஐயப்பனின் புனிதம் காக்க தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக இந்துக்களின் நம்பிக்கைகளை புறக்கணிக்கும் “ திமுக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஐயப்ப பக்தர்களாகிய நாங்கள் ஓட்டுப் போட மாட்டோம் ” என்ற ஸ்டிக்கர் ஆயிரக்கணக்கான வீட்டுக் கதவுகளில் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது. இதன் விளைவாக நான் இந்து விரோதி அல்ல ! – என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் சொல்லக்கூடிய அளவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

2019 - விவேகானந்தர் வேண்டாமா....


கோவை அரசு கலைக் கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை அமைந்துள்ள பகுதியின் சுற்றுச்சுவரில் மார்க்ஸ் , ஈ.வே.ரா. படங்கள் வரையப்பட்டிருந்தது . அதனருகில் இளைஞர் முன்னணி பொறுப்பாளர் சுவாமி விவேகானந்தர் உருவத்தை வரைந்தார் . உடனே வெகுண்ட நக்ஸல் திராவிட இயக்கத்தினர் புகாரளித்தனர் . HYF மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.

இந்து இளைஞர் முன்னணி போராட்ட அறிவிப்பு கல்லூரி நிர்வாகத்தை நடவடிக்கை இல்லையென்று சொல்ல வைத்தது . இளைஞர் முன்னணிக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

2019 - விளையாட்டால் இணைந்திடு


இந்து இளைஞர் முன்னணி சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் கபடி மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது . ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் விளையாடினர் . நல்ல எண்ணிக்கையில் இளைஞர்கள் இயக்கத்தில் இணைந்தனர்.

2019 - விஸ்தாரக் முயற்சி


விகாரி ஆண்டு இலக்கை அடையும் ஆண்டு ' என்று தீர்மானிக்கப்பட்டது. விஸ்தாரக் - விஸ்தார் யோசனை செய்யப்பட்டது. அதனடிப்படையில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒரு வார காலம் முழுநேர ஊழியர்களாக ஏதாவது ஒரு பகுதியில் பணியாற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. 120 பேர் இதுவரை பணியாற்றி உள்ளார்கள்.

2019 களத்தில் இந்து சமுதாயம்


சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரி லயோலா காலேஜ். பொதுவாக இந்து விரோத எண்ணங்களை கொண்டவர்கள் அதிகம் இருக்கின்ற அந்த நிறுவனம் "வீதி விருது திருவிழா" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது . அதில் கண்காட்சி என்பதாக இந்து கடவுள்களை, பாரதமாதாவை, மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களை மிகக் கேவலமான வகையில் ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தி இருந்தனர்.

இதுபோன்ற பல நிகழ்வுகளை இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக செய்து வருகின்றது. இந்து முன்னணி பேரியக்கம் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இவர்களின் தேசவிரோத, ஹிந்து விரோத நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியது . வீதி விருது விழா நிகழ்வில் காட்சிப்படுத்தி இருந்த படங்கள் மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. மக்கள் களம் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த நிறுவனம் மன்னிப்பு தெரிவித்து காட்சிக்கு வைத்திருந்த ஓவியங்களை அகற்றியது.

2019 பல்லுக்கு பல்


திருச்சியில் கிறிஸ்தவ மிஷனரிகள் " தமிழ் இலக்கியங்களில் பெண்களின் அவல நிலை " என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர் . இவர்களின் நோக்கம் இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கையை கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்த வேண்டும் என்பதுதான்.

இதனை முறியடிக்க களமிறங்கிய இந்துமுன்னணி "பைபிளில் பெண்களின் அவல நிலை" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும் என்று போஸ்டர் அடித்து நகரம் முழுவதும் ஒட்டினர். இதைக்கண்ட காவல்துறை மிஷனரிகளை அணுகி கிறிஸ்தவர்களின் அந்த நிகழ்ச்சியை தடை செய்தது.

2019 பூட்டை உடை


தாமிரபரணி புஷ்கர் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு . பக்தர்கள் அன்றைய தினம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். திட்டமிட்ட ரீதியில் அரசாங்கம், பக்தர்கள் குளிக்கும் படித்துறைகளுக்கு பூட்டு போட்டு இடையூறு ஏற்படுத்தினர்.

இந்து முன்னணி ஊழியர்கள் களமிறங்கி, பூட்டை உடைக்கும் போராட்டம் நடக்கும் என்று அறிவித்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் குளிப்பதற்கு தடையாக இருந்த பூட்டுகளை அகற்றி பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

2019 - சரித்திரத்தில் ஒரு பொன்னேடு


கோவை மாவட்டம், வடமதுரையில் 1300 ஆண்டுகால பழமை வாய்ந்த விருத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 350 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது . இந்த கும்பாபிஷேகத்தை நடத்தியே ஆக வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக இந்து முன்னணி தொடர்ந்து போராடியது . இந்த ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது . வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் கலந்து கொண்டார்

மேலும் படிக்க