மதமாற்றத்தை
முறியடிக்க
களத்தில்
இந்துமுன்னணி

மதமாற்றத்தை முறியடிக்க களத்தில் இந்துமுன்னணி

அன்பு மதம் என்ற பெயரில் ஆசைகாட்டி, அச்சுறுத்தி, ஏழ்மையை, இயலாமையை பயன்படுத்தி தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்ற அறுவடை அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது .

ஹிந்துக்கள் வணங்கும் கடவுளர்களை சாத்தான் என்றும் பிசாசு என்றும் கூறிக்கொண்டு இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் கணக்கிலடங்காது . பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வெளிநாட்டு பணத்தை இறக்குமதி செய்து, அதை வைத்துக்கொண்டு மதமாற்ற பிரச்சார வேலைகளை செய்து வருகிறார்கள். ஞாயிறு என்றால் கிராமம் கிராமமாகச் சென்று மதமாற்றம் செய்வது இவர்கள் வழக்கமாகிவிட்டது. இந்த தீய சக்திகள் ஹிந்து மத பண்பாடு, வழிபாட்டு முறைகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி நமது பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் செயலாற்றுகின்றனர்.

இதைத் தடுக்க இந்துமுன்னணி மிகப் பெரும் முயற்சி எடுத்து மக்கள் விழிப்புணர்வு பணிகளில ஈடுபட்டு வருகிறது. கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்றத்தை பல இடங்களில் தடுத்து மிகப் பெரும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. வாரந்தோறும் கூட்டு வழிபாடுகள் நடத்தி வருகிறது. கிராமங்களில் பண்பாட்டு வகுப்பு நடத்துகிறது. சமய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. விளக்கு பூஜை, சுமங்கலி பூஜை போன்றவைகளின் மூலமாக பக்தி உணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு ஹிந்து மதத்தின் மேன்மைகளை புரிய வைக்கிறது.

இந்துமுன்னணி கிளைக் கமிட்டி கிராமங்களை காக்கும் காவல் தெய்வங்களாக இருந்து மதமாற்ற சதியை முறியடிக்கின்றன. ஒவ்வொரு இந்துமுன்னணி ஊழியரும் மதமாற்றத்தை தடுக்க தனது கிராமத்தை, ஊரைக் காக்க அயராது உழைத்து வருகின்றனர்.