இந்து ஆட்டோ
தொழிலாளர்
முன்னணி
சங்கம்

ஊரின் காவல் தெய்வங்கள்

ஒரு ஊரின் பாதுகாப்பில் காவல்துறைக்கு மட்டுமல்ல ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மிகப் பெரும் பங்குள்ளது. ஊருக்கோ நகத்துக்கோ யார் வருகிறார்கள், வருபவர்கள் செல்லும் இடம் , அவர்கள் எத்தகையவர்கள் என்பதை அறியக்கூடிய பாதுகாப்பு வீரர்கள் .

வஞ்சிக்கப்படும் உழைப்பாளிகள்

 • ஒரு சில ஆட்டோ ஓட்டுநர்களின் நடவடிக்கைகளால் மக்கள் அவர்களை மதிப்பாக நடத்தப்படுவதில்லை
 • காவல்துறையின் அதிகாரிகள் பலர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர்.
 • பொய் வழக்கு போடுகின்றனர்
 • சில கட்சிகளின் ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் இந்து ஆட்டோ ஓட்டுநர்களை இந்து விரோதிகளாக மாற்ற முயற்சிக்கிறது
 • ஆட்டோ ஓட்டுனர்கள் அரசியல் லாபத்திற்காக பலிகடா ஆக்கப்படுகின்றனர்.
 • முறைசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் இந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கிடைப்பதில்லை
 • சில இயக்கங்கள் சந்தா என்ற பெயரில் ஏழைகளின் பணத்தை கபளீகரம் செய்கிறது
 • அரசியல் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தி கொள்கின்றனர்

மத பாரபட்சம்

திராவிட கட்சிகள் மதசார்பின்மை பேசி இந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவ வருவதில்லை .முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஜமாத்தின் பணபலமும் முஸ்லிம் அமைப்புகளின் உதவியும் மதசார்பற்ற கட்சிகளின் உதவியும் ஓடோடி வருகிறது. ஆட்டோ நிலையத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சனை என்றால் முஸ்லிம்களுக்கு ஆயிரம் கரங்கள் உதவிக்கு வருகிறது. கிறிஸ்தவ ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சர்ச்சும் பாதிரிகளும் பக்கபலமாக இருக்கின்றனர். எனவே இந்து ஆட்டோ ஓட்டுனர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவவும், காவல் துறையினரின் வீணான தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்கவும், மதரீதியான துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றவும், இந்து விரோத கம்யூனிஸ்டுகள் இடமிருந்தும் பாதுகாக்கவும் இந்து ஆட்டோ முன்னணி சங்கத்தை இந்து முன்னணி பேரியக்கத்தின் துணையோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது

லட்சியம்

 • இந்து ஆட்டோ ஓட்டுனர்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்க வேண்டும்
 • அரசின் நல வாரியங்கள் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் பெற்றுத்தர வேண்டும்
 • அரசியலுக்கு அப்பாற்பட்டு தொழிலாளர் நலன் ஒன்றையே குறிக்கோளாக வைத்து தர்ம சிந்தனையுடன் செயல்பட வேண்டும்

ஏன்? எதற்கு ? எப்படி?

"பணியில் நேர்மை;பழக இனிமை;
இது நமது கடமை"

களப்பணியில்

 • தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம,நகரங்களில் ஆட்டோ ஸ்டாண்ட் கிளைகள் அமைப்பது .
 • இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் சார்பாக வருடந்தோறும் ஆயுத பூஜை மிக சிறப்பாக கொண்டாடுவது
 • இந்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் அவர்களின் நலன் கருதி காப்பீட்டு திட்டம் (லைஃப் இன்சுரன்ஸ்)

களப்பணியில்

 • இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பாக ஆட்டோ நல வாரிய நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தருவது
 • இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் சார்பாக வருடத்திற்கு ஒருமுறை மாநில பொதுக்குழு கூடுவது

நாம் என்ன செய்ய வேண்டும்

தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை உடனடியாக இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தில் இணையச் செய்வோம் . எல்லோரையும் இந்த சங்கத்தில் சேர்க்க உறுதுணை புரிவோம் . சந்தேகங்களுக்கு அருகிலுள்ள இந்து முன்னணி கிளைகளை அணுகுவோம் தமிழகத்தில் புதிய சரித்திரத்தை படைப்போம் வாருங்கள் ஆட்டோ ஓட்டுனர்களே....

என்றும், எங்கும் தேசீய, தெய்வீகப் பணியில்