இந்து
வியாபாரிகள்
நலச் சங்கம்

வியாபார தர்மம்

வியாபாரம் செய்வதிலும் தர்மத்தைக் கடை பிடிப்பது நமது வழக்கம். நேர்மையாக, நாணயமாக செயல்படுவது போற்றுதலுக்குரியது. பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் வியாபாரத்தில் முன்னோடிகளாக இருந்துள்ளோம். அந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கவே இந்து வியாபாரிகள் நல சங்கம்

செய்யும் தொழிலே தெய்வம்

இந்து வியாபாரிகள் அனைவரும் சாமி கும்பிடாமல் தொழிலை தொடங்குவதில்லை . தினசரி சாமி கும்பிட்டு விட்டுத்தான் தொழிலை ஆரம்பிக்கிறார்கள் இந்து வியாபாரிகள் அனைவருமே தெய்வ பக்தி நிறைந்தவர்கள்.

ஆனால் தமிழகத்தில் வியாபாரிகளின் தலைமை இந்து மதத்தினரிடம் இல்லை. அதனால் இந்து வியாபாரிகளுக்கு பல அநீதிகள் இழைக்கப்படுகின்றன.

வியாபாரத்திலும் மதம்

கிறிஸ்துவ, முஸ்லிம் வியாபாரிகளுக்கு பண உதவி செய்ய வழிகாட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண சர்ச்சும், மசூதியும் உள்ளது. ஆனால் இந்து வியாபாரிகளின் துயர் துடைக்க மதசார்பற்ற கட்சிகள் முன்வருவதில்லை.

முஸ்லிம், கிறிஸ்துவ வியாபாரிகள் தங்கள் மதம் சார்ந்து செயல்படுகின்றனர். எனவே இந்து வியாபாரிகளின் நியாயமான நலன்களை பாதுகாக்க இந்து வியாபாரிகள் நலச்சங்கம் இந்துமுன்னணி பேரியக்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாம் என்ன செய்யவேண்டும்

எனவே தமிழகம் முழுவதும் உள்ள இந்து வியாபாரிகள் அனைவரும் சங்கத்தில் இணைய வேண்டுகிறோம். எல்லோரையும் இந்த சங்கத்தில் சேர்க்க உறுதுணை புரிவோம் . சந்தேகங்களுக்கு அருகிலுள்ள இந்து முன்னணி கிளைகளை அணுகுவோம் தமிழகத்தில் புதிய சரித்திரத்தை படைப்போம் வாருங்கள்

ஏன்? எதற்கு ? எப்படி?


பாரதம் செழிக்க சுதேசிய வணிகம்


நோக்கம் மற்றும் செயல்பாடுகள்

  • வியாபாரிகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் கோவிலை சுற்றி வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட சின்னஞ்சிறு வியாபாரிகளின் நலன்களை பாதுகாத்தல் ,
  • வியாபாரிகளுக்கு எதிராக நடைபெறும் தவறுகளுக்காக போராடுதல் ,
  • சில்லறை வியாபாரிகளுக்கு தேவையான பராமரிப்பு , மருத்துவம் , உள்ளிட்ட இன்றியமையாத தேவைகளை சரிசெய்வது.

நோக்கம் மற்றும் செயல்பாடுகள்

  • சந்தை பொருட்களை தரம் குறைந்து விற்பனை செய்தல் , போலி எடை கற்களை பயன்படுத்தி விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூட்டு குழுவாக செயல்படுதல் .
  • நலிவடைந்த வியாபாரிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான பொருள்உதவி வழங்குதல்.
  • நலிவடைந்த வியாபாரிகளின் குடும்பத்திற்கு சங்கம் மூலம் நிதி வழங்குதல்.

நோக்கம் மற்றும் செயல்பாடுகள்

  • ஒன்றிணைந்த வியாபாரிகளுக்கு ஏற்படும் சின்னஞ்சிறு தொழில் ரீதியான பிரச்சினைகளை உடனடியாக சட்டப்படி தீர்த்து வைத்தல் ,
  • சங்க உறுப்பினர்களாக உள்ள வியாபாரிகள் இடையே நேர்மறையான தொழில் போட்டிகளை உருவாக்கி அவர்கள் தொழிலில் சிறந்து விளங்க ஊக்குவித்தல் ,
  • மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் அவர்கள் செய்து வரும் தொழில் தொடர்பான பொருள்கள் சந்தைப்படுத்துதல் மற்றும் தாங்கள் விற்கும் பொருட்கள் குறைவான விலையில் கிடைக்கும் இடங்களை அறிந்து கொள்ளும் வகையிலான உதவிகளைச் செய்தல் ,
  • தரைக்கடை வியாபாரிகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட சின்னஞ்சிறு வியாபாரிகளை அவர்கள் செய்து வரும் தொழிலுக்கு ஏற்ப அவர்களை முறைப்படுத்த வழிவகை செய்தல்

என்றும், எங்கும் தேசீய, தெய்வீகப் பணியில்