இந்து
அன்னையர்
முன்னணி

பெண்ணே நீ மகத்தானவள்

ஆணுக்குப் பெண் சளைத்தவள் அல்ல என்ற மனப்பான்மையுடன் இந்து சமுதாய பிரச்சனைகளை தீர்க்க பெண்கள் முன்வர வேண்டும் . இந்து மதத்தை இதுவரை காத்து வந்ததில் பெண்களுக்குத்தான் முக்கிய பங்கு உள்ளது . குடும்பத்தை இந்து குடும்பமாக வைத்திருக்க வேண்டும் . குழந்தைகளை இந்து விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் . மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் . இந்து மதத்தின் பெருமைகளை வேற்று மதத்தினரிடமும் எடுத்துச் சொல்ல வேண்டும் .

இந்து அன்னையர் முன்னணி நோக்கம்

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு இந்துக்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது . ஆன்மீக எழுச்சி மூலமாக தேசிய சிந்தனையை உருவாக்குதல் . இந்து சமுதாயத்திற்கு எதிரான சீர்கேடுகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது . தொன்று தொட்டு வரும் நமது இந்து சமுதாய பெருமைகள் , வாழ்க்கை முறை , பண்பாடு , கலாச்சாரம் ஆகியவைகளை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பது . இந்துப் பெண்கள் கல்வி , குடும்ப நிர்வாகம் , தொழில் ஆகியவற்றில் திறன்மிக்கவர்களாக உருவாவதற்கு ஊக்கப்படுத்துவது . அறியாமையை பயன்படுத்தி , பொய்யாக , ஏமாற்றி காதல் வலையில் விழ வைத்து , மோசடியாக நடைபெறும் மதமாற்றத்தை முற்றிலும் தடுப்பது .

ஆன்மீகத்தின் மூலம் மறுமலர்ச்சி

நமது ஊரில் இருக்கும் கோயில்களில் நல்ல இணக்கமான தொடர்பை ஏற்படுத்தி , அந்தக் கோயில்களை இந்து சமுதாய கேந்திரமாக மாற்றுவது . (ராகுகால பூஜை , சங்கடஹர சதுர்த்தி , பிரதோஷம் , அஷ்டமி , நவமி காலத்தில் பக்தர்களை நாமாவளி சொல்ல வைப்பது , திருவிளக்குப் பூஜை வழிபாடுகள் நடத்துவது . கோயில் திருவிழாக்களில் குழந்தைகளின் ஆன்மீக கலை நிகழ்ச்சி சமய சொற்பொழிவு நடத்த வைப்பது )

களத்தில்

வாரா வாரம் பண்பாட்டு வகுப்புகள் , குடும்ப நன்மைக்காக கூட்டு வழிபாடு நடத்துவது . மக்களை ஒருங்கிணைத்து . கோயில்களில் அல்லது பொது இடங்களில் மாதம்தோறும் திருவிளக்குப் பூஜை நடத்துவது . ஏப்ரலில் கோடைக்கால பண்பாட்டு சமய வகுப்பு (தெருக்கள் தோறும்) நடத்துவது . ஆடி வெள்ளிக் கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்தல், புரட்டாசி நவராத்திரி விழா, சக்தி பூஜை . வேலுநாச்சியார் ஜெயந்தி நடத்துவது. மாணவர்கள் கல்வியில் மேம்பட ஹயக்ரீவர் பூஜை, பெற்றோருக்குப் பாத பூஜை , கோமதா பூஜை , சுமங்கலி பூஜை , குலதெய்வ வழிபாடு , துளசி பூஜை போன்றவை ஏற்பாடு செய்தல்.

ஏன்? எதற்கு ? எப்படி?

"அன்னையர் சக்தி ஓங்கட்டும்; ஆன்மீக தமிழகம் ஒளிரட்டும்".

இந்து அன்னையர் முன்னணி செயல்பாடுகள்

திட்டமிடல் , பயிற்சியளித்தல் , களத்தில் பணி செய்தல் . கருத்தரங்கம் , விவாதங்கள் நடத்தி சந்தேகங்களை தெளிவு படுத்துவது . லட்சியத்தை புரிய வைத்தல். குடும்ப உறவுகளை மேம்படுத்துதல் , பள்ளி , கல்லூரி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகள் கொடுப்பது . அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது . பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு உதவித் திட்டங்களை தெரிந்துகொண்டு , அவர்களை பயன்பெற வைப்பது.

இந்து அன்னையர் முன்னணி செயல்பாடுகள்

சமூக சீரழிவுகளை , தேச விரோதகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது. குடும்ப அரவணைப்பு , மன உளைச்சலுக்கு ஆளானாவர்களுக்கு ஆறுதல் படுத்தி வழிகாட்டுவது ( கவுன்சிலிங் ) . நமது கலாச்சார உடைகளை அணிவதையும் , இந்து சமய சின்னங்கள் அணிவதன் அவசியத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. தலைமைப் பண்புக்கும் , ஆளுமைப் பண்புக்கும் உரிய தகுதிகளை வளர்த்துக் கொள்வது . மாணவர்களிடம் தோல்விகள் கூட வெற்றிக்கான [அடிக்கட்டுகள் தான் என்ற மனப்பான்மை உருவாக்குவது , அவர்களின் திறன்கள் வெளிப்பட போட்டிகளை நடத்துவது .

இந்து அன்னையர் முன்னணி செயல்பாடுகள்

குடும்பங்களில் ஏற்படும் பிணக்குகளை நீங்கவும் , மதுவிற்கு அடிமையான ஆண்களைக் குடி பழக்கத்திலிருந்து மீட்க கவுன்சிலிங் கொடுப்பது . பெண்கள் அனைவரும் தற்காப்புக் கலைகளை கற்று , சமூகவிரோதிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பது .

என்றும், எங்கும் தேசீய, தெய்வீகப் பணியில்