இந்துப்
பெண்கள்
பாதுகாப்பு
மையம்

பண்பாட்டின் மையம் பெண்கள்

ஒரு நாட்டில் பெண்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. குடும்பத்தில் மட்டுமல்ல , தேசத்தினைக் காக்கும் ஆணி வேராகதிகழ்பவர்கள் பெண்கள். பெண்களின் வாழ்வு நிலையை , அவர்களது வாழ்க்கை முறையை சீரழித்தால் நாட்டின் தலை எழுத்தே மாறிவிடும். ஆகவே பெண்களை பாதுகாக்கவே இந்து பெண்கள் பாதுகாப்பு மையம்

புனிதப் போர் என்ற பெயரில் ?

கைவிடாமல் கடைசி வரை இணை பிரியாமல் வாழ்ந்தால் தான் அது காதல் . காதலுக்கு ஜாதி இல்லை மதம் இல்லை சொல்லிவிட்டு மதம் மாறினால் தான் திருமணம் செய்வேன் என்று கூறி ஏமாற்றுவது தான் லவ் ஜிகாத் . மத மாற்றித்தான் திருமணம் செய்யவேண்டும் என்றால் அது உண்மையான காதலா? லவ் ஜிகாத்திற்கு பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஒரு முஸ்லீம் இளைஞனுக்கு ஆடம்பர பைக் , கை செலவிற்குப் பணம் கொடுக்கப் படுகிறது. இத்தகைய சதிச் செயல்களில் இருந்து இந்துப் பெண்களைக் காக்க உருவாக்கப்பட்டது இந்துப் பெண்கள் பாதுகாப்பு மையம்.

விழிப்புணர்வு எனும் கவசம்

தமிழகத்தில் இந்து முன்னணி இந்துப் பெண்களைப் பாதுகாக்க குறிப்பாக லவ்ஜிகாத்திற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்து வருகிறது . குறிப்பாக இளம் பெண்களை குறிவைத்து இஸ்லாமிய இளைஞர்கள் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி மதமாற்றித் திருமணம் செய்துகொண்டு பின்னர் அவர்களைத் தலாக் (விவாகரத்து ) செய்துவிட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்ய சென்று விடுகின்றனர் . இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணை பெற்றோர் வீட்டில் திரும்பச் சேர்க்க மறுக்கிறார்கள் . வேறுவழியில்லாமல், எங்கு செல்வது என்று தெரியாமல் பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் மற்றொரு இஸ்லாமியனுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து தரப்படுகிறாள். எப்போது தலாக் தலாக் என விவாகரத்து செய்யப்படுவோமா என்று பயந்து பயந்து வாழ்கிறார்கள் . சில சமயங்களில் விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர் . இத்தகைய சதிச் செயல்களில் இருந்து இந்துப் பெண்களைக் காக்க உருவாக்கப்பட்டது இந்துப் பெண்கள் பாதுகாப்பு மையம்.

மதமாற்ற பேய்

கிறிஸ்தவ மிஷனரிகள் திட்டமிட்டு மதாம்ற்ற வலையில் பெண்களை விழ வைக்கின்றனர். பெண்களின் மூலமாக குடும்பத்தை மதமாற்றி ஒட்டு மொத்த சமுதாயத்தி சீரழிக்கின்றனர். தமிழகத்தில் மதம்மாறி சென்ற ஆயிரக்கணக்கான பெண்களை, வாழ்வில் ஏமாற்றப்பட்ட பெண்களை நல்வழிப்படுத்தி மீண்டும் அவர்களை பெற்றோருடன் சேர்த்து வைக்கும் மாபெரும் பணியில் இந்து பெண்கள் பாதுகாப்பு மையம் ஈடுபட்டு வருகிறது.

ஏன்? எதற்கு ? எப்படி?

"இந்து பெண்களை காப்போம்; மதமாற்றத்தை தடுப்போம்"

களத்தில்

  • போலியான காதல் வலையில் சிக்கி சீரழிந்து விடாமல் இருக்க இந்து பெண்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது.
  • லவ் ஜிகாத் மூலம் போலி காதல் வலையில் விழுந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங்- மனநல ஆலோசனை வழங்குவது
  • பாதிக்கப்பட்ட பெண்களுக்காக காவல்துறையிலும் நீதித்துறையிலும் வாதாடுவது

களத்தில்

  • ஒவ்வொரு ஊரிலும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பார்க், பீச் போன்ற பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பாக தடுப்பு குழு அமைப்பது
  • பெண்களின் உதவிக்காக ஹெல்ப்லைன் (உதவி மையம்) அமைப்பது.

என்றும், எங்கும் தேசீய, தெய்வீகப் பணியில்