ஒரு பார்வை

இந்து முன்னணி

இந்து முன்னணி பற்றி சுருக்கமாக

இந்து முன்னணி 1980-ல் துவக்கபட்டது. நாத்திக பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும், மத மாற்றத்தைத் தடுப்பதற்காகவும், இந்து மதத்தின் பெருமைகளை இந்துக்களிடம் புரிய வைப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. இந்து முன்னணியின் கடும் உழைப்பால் நாத்திகப்பிரச்சாரம் முறியடிக்கபட்டுள்ளது. மதமாற்றம் தடுக்௧ப்பட்டு வருகிறது.கோவை,திருச்சி போன்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் கொடிகட்டி பறந்த நிலைமை மாறி, இன்று தேசிய இயக்கங்௧ள் கால் பதிக்கத் துவங்கி விட்டன. எந்தத் தமிழகத்தில் விநாயகர் சிலை உடைப்பு நடந்ததோ அந்த தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்கள் களைகட்டத் துவங்கி விட்டன.

கோரிக்கைகள்..

  • இந்து ஆலயங்களையும், அறநிலையங்களையும் நிர்வகிக்க சுதந்திர வாரியம் நிறுவப்பட வேண்டும். அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும்
  • மதமாற்ற தடைச் சட்டம் இயற்றப்படவேண்டும்.
  • பொதுசிவில் சட்டம் கொண்டுவர பரிந்துரைக்க வேண்டும்.
  • குடும்பக் கட்டுப்பாட்டில் மற்ற மதத்தினரையும் முழுமையாக ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
  • பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஹரிஜனங்கள் , பழங்குடியினர் ஆகிய இந்துக்களின் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்டுள்ள அரசின் சலுகைகளை மதம் மாறிப்போன முஸ்லிம்களுக்கும் , கிறிஸ்தவர்களுக்கும் வழங்கக் கூடாது. இந்துக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்

கோரிக்கைகள்..

  • பள்ளிகளில் , கல்லூரிகளில் ஆன்மீக, பண்பாட்டு கல்வியை கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • பசுக்கொலையை முழுமையாக தடை செய்ய வேண்டும். பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.
  • இந்து தெய்வங்கள், பழக்க வழக்கங்கள், சான்றோர்கள், புனித நூல்கள் ஆகியவற்றை இழிவுபடுத்துகிற நாத்திக பிரசாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
  • இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்கவேண்டும்.

இந்துமுன்னணி குறித்து

இந்து முன்னணி பெயர் வர காரணம்.

இந்து முன்னணி துவங்குவதற்கு முன்பாக சேலம் திரு. ராமசாமி என்று ஒருவர் இருந்தார் . அவர் இந்து ஆலயப் பாதுகாப்புக்காகப் பல பணிகளைச் செய்திருக்கிறார் . அவர் இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பை நடத்தி வந்தார் . இந்து மக்கள் முன்னணி என்பதில் இந்து என்றாலே மக்கள் தான், எனவே , அதனை இந்து முன்னணி எனச் சுருக்கி பெயர் வைக்கப்பட்டது .பெயர் தமிழிலேயும் இருக்கிறது, மக்கள் சுலபமாகச் சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது . மனதில் பதியும், எளிதில் புரியும்.

அறிவோம் இந்துமுன்னணி

ஆழ்வார்களும் நாயன்மார்களும் சஞ்சரித்த பூமி தமிழகம் , பாரதத் திருநாட்டிலேயே கோவில்கள் நிறைந்த மாநிலம் தமிழகம். குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் குடியிருக்கும் இடம் எனப் பெயர் பெற்றதும் தமிழகம்தான். தமிழகத்தில் ரிஷிகளும் , முனிவர்களும் , ஞானிகளும் , கவிஞர்களும், பக்தி மனம் கமழும் கணக்கில்லா நூல்களைப் பாடியுள்ளார்கள் .

மேலும் படிக்க