சமுதாய சமர்பண தினம்

பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் இந்து முன்னணியின் முதல் மாநிலத் தலைவர் அய்யா தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்த தினத்தன்று சமுதாய சமர்பண தினம் கொண்டாடப்படுகிறது. ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள், “இந்துக்கள் குழுக்களை அமைத்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள இந்துக்களை விழிப்புணர்வு அடைய செய்ய வேண்டும். பிரச்சனை ஏற்படும் போது நேரடியாக களத்தில் இறங்கி குரல்கொடுக்க வேண்டும் ” என்றார்.

சமுதாய சமர்பண தினம்

அவர் வயது முதிர்ந்த காலத்தில் இயக்கத்திற்கு வந்தாலும் தனது வாழ்வு முழுக்க இந்து முன்னணிக்காகவே அர்பணித்தார். மிகப் பெரிய செல்வாக்கு உள்ளவர், ராணுவத்தில் பணியாற்றியவர், MP ஆக இருந்தவர். இந்துமுன்னணி இயக்கத்தின் வளர்ச்சிக்காக தனது வயதைக் கூட பொருட்படுத்தாமல் சுற்றுப்பயணம் செய்தார்.

சமுதாய சமர்பண தினம்

அவர் “நான் பயணத்தில் இருக்கும்போதே எனது உயிர் பிரிய வேண்டும் அல்லது போராட்டத்தில் இருக்கும்போதே எனது உயிர் பிரிய வேண்டும் அல்லது இந்துக்களுக்காக மேடையில் நான் பேசிக் கொண்டிருக்கும்போதே எனது உயிர் பிரிய வேண்டும். என் தாய் மண்டைக்காடு பகவதி அம்மா ஒரு போதும் என்னை கிடையில் போட மாட்டாள்" என கூறுவார்.

சமுதாய சமர்பண தினம்

அவருடைய விருப்பப்படியே ஆர்.எஸ்.எஸ்.சின் ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார் விழாவை ஏரலில் கொண்டாடிய மேடையில், இந்துக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஐயா தாணுலிங்க நாடாரின் உயிர் பிரிந்தது. இத்தகைய உயர்ந்த மனிதரின் நினைவைப் போற்றும் வகையிலும், இந்து சமுதாயத்திற்கு ஒவ்வொரு இந்துவும் ஏதாவது ஒரு வகையில் சேவை புரிவது கடமை எனபதிப் புரிய வைக்கவும் இந்து முன்னணி பேரியக்கம் சமுதாய சமர்பன தினம் கொண்டாடுகிறது.

சமுதாய சமர்பண தினம்

தேசத்திற்கும், இந்து தர்மத்திற்கும் தொண்டாற்றுவது அவசியம். அது ஒரு பாக்கியம். நம்மால் முடிந்ததை இதற்காக அர்ப்பணம் செய்யவேண்டும் . வாழ்க்கையையே அர்பணித்து முழுநேரமாக பணியாற்றலாம். அல்லது நம்மால் இயன்ற நிதியை , பொருளை தேசீய, தெய்வீகப் பணியாற்றுகின்ற இந்துமுன்னணி இயக்கத்திற்காக வழங்கலாம்.

சமுதாய சமர்பண தினம்

ஒவ்வொரு இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் அவரவர் மதத்திற்காக அவர்களது சேமிப்பை வழங்குகின்றனர். இந்துக்களும் நமது தர்மத்திற்காக எதாவது வழங்கவேண்டும் . குறைந்த பட்சமாக வருடத்தின் ஒரு நாள் வருவாயையாவது வழங்கிட வேண்டும். தலைவர் தாணுலிங்க நாடார் (1915-1988) தன் வாழ்நாள் இறுதிவரை இந்துமுன்னணியின் தலைவராகப் பணியாற்றி வழிகாட்டியவர். அவரது நினைவாக இந்துமுன்னணி சமுதாய சமர்ப்பண தினத்தை கொண்டாடுகிறது. நாமும் பாக்கிய சாலிகள் ஆகுவோம்!

prev
next